"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 மார்ச் 2012

அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் அதிகரித்துள்ளன.

0 comments

அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்கவகையில் அதிகரித்துள்ளது. பள்ளிவாசல்களை அமைப்பதற்கான பொதுத்தடை இருந்தபோதிலும், பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.2000ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் அமெரிக்காவில்
1209பள்ளிவாசல்கள் மாத்திரமே காணப்பட்டது.எனினும் தற்போது அமெரிக்காவில் 2106பள்ளிவாசல்கள் காணப்படுகின்றதாக கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது.2000ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 74சதவீத அதிகரிப்பாகும்;.அதிகமான முஸ்லிம்கள் புறநகர் வாழ்க்கையைத் தழுவிவாழ்வதாகவும் இது காட்டுகின்றது.

இன்றைய பள்ளிவாசல்கள் தற்போதைய நடைமுறைப் போக்குகளை
கைக்கொள்ளப் பார்க்கின்றதுடன்,நவீன சமூகத்திற்கு ஏற்றாற்போல் தங்களது அன்றாட வணக்கங்களை திட்டமிடப் பழகியுள்ளனர் என இஸ்லாமியக் கல்விப் பேராசிரியர் கலாநிதி இஹ்ஸான் பக்பி, அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் அதிகரித்துள்ளதை விளக்கும் போது தெரிவித்தார்.அமெரிக்காவின் பள்ளிவாசல்கள்,முஸ்லிம்களின் வாழ்வை பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைத்துள்ளது என கலாநிதி
இஹ்ஸான் பக்பியின் ஆய்வு தெரிவிக்கின்றது.


நகர் பகுதிகளிலேயே பள்ளிவாசல்களின் எண்ணிக்கை கூடியளவில் அதிகரித்துள்ளது.2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது புறநகர்பகுதிகளில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 16சதவீதத்திலிருந்து 28சதவீதம்வரை அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க் அதிபட்சமாக
257 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.அதற்கு அடுத்தபடியாக
கலிபோர்னியாவில் ஏறத்தாள 256பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது அமெரிக்காவில் இஸ்லாம் மிகவேகமாக வளாந்துவரும் சமயமாக விளங்குகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி