"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 டிசம்பர் 2011

தமிழக--கேரள எல்லையில் கலவரம்! லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன!

0 comments

கம்பம்: முல்லைப் பெரியார் அணை பிரச்சினையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். மேலும் கேரளத்திற்கு வேலைக்கு சென்ற தமிழக தோட்டத் தொழிலாளர்கள் 500 பேர் கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டனர்.


கேரள மாநிலம் குமுளி எல்லையில் நேற்று முன்தின இரவில் தமிழக லாரிகளை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து குமுளி மலை சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. மேலும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

இந்த பதற்றமான நிலையை தொடர்ந்து, குமுளி, போடிமெட்டு, கம்பம் மலைச்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே தமிழக காவல்துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து எல்லை வழியாக மலைப் பாதையில் நின்ற வாகனங்கள் மட்டுமே நேற்று அதிகாலையில் குமுளிக்கு அனுப்பப்பட்டன.

உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டான்லி, கேரள மாநில காவல்துறையுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கேரள மாநில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்ட லாரிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. இதனிடையே தமிழக லாரிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலையில் காட்டுத் தீ போன்று கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் பரவியது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதை பகுதிக்கு லோயர்கேம்ப், கூடலூர் பகுதி பொதுமக்கள் விரைந்து சென்றனர். அங்கு தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து குமுளிக்கு பால் மற்றும் மளிகைப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பினர். தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும்வரை வாகனங்களை இயக்க கூடாது என்று பொதுமக்கள் கூறியதையடுத்து காய்கறி மற்றும் பால் வேன்கள் தமிழ்நாட்டிற்கு திருப்பி விடப்பட்டன.

இதை தொடர்ந்து கூடலூர் மற்றும் லோயர் கேம்ப் பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமங்களிலேயே சாலைகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நேற்று கம்பம்-குமுளி சாலையில் வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி