உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
என்னை ஊனம் என்று!
உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!
நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!
விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!
ஆக்கம் -யாசர் அரஃபாத்