* நமதூரில் தன்னவர்களால் அதிரை அனைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு ௬ட்டம் துபாயில் உருவாகின.
* அதைப்போன்று நமது ஊரில் பெரியவர்களை முன்வைத்து அதிரை அனைத்து முஹல்லாஹ் ௬ட்டு அமைப்பு அதிரையிலும் நல்ல முறையில் உதித்தது.
*லண்டன் அதிரை வாசிகள் அனைத்து முஹல்லாஹ் ௬ட்டு அமைப்பு லண்டனிலும் மலர முயர்ச்சித்தும் வருகின்றன.
* இதை தொடர்ந்து முத்துப்பேட்டையிலும் இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் பிரிந்து கிடந்த அனைத்து முஹல்லாவின் ஒற்றுமையை மீண்டும் வலுபடுத்தவும், அவற்றை ஓரணியில் சேர்த்து நடைமுறைப் படுத்தும்விதமாக 29-11-2011 அன்று மாலை 4 .30 மணியளவில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லா பள்ளி வாசலை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முதல் கட்டமாக முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் பிரதிநிதி (சோழநாடு) ஜனாப்.KM நெய்னார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவின் ஒற்றுமை குறித்தும், பிரிந்து கிடந்த முஹல்லாவை மீண்டும் ஒன்று சேர்க்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அதன் முடிவாக அனைத்து முஹல்லாவிலும் அந்த அந்த முஹல்லாவில் அறிவிப்பு செய்து குறைந்தது 10 நபரை தேர்வு செய்து தருமாறும், தேர்வு செய்த அந்த நபரின் பெயர்களை வருகிற 5 ஆம் தேதிக்குள் எங்களிடம் தர வேண்டும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் தலைவர் ஜனாப்.S . ஜஹபர் உசேன், இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாப். PM . ஜாகிர் உசேன், இச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஜனாப்.M .சாகுல் ஹமீது இவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் முத்துப்பேட்டை அனைத்து முஹல்லாஹ் ௬ட்டமைப்பு (MAMF) வருகின்ற 9 -12 - 2011 முஹைதீன் ஜூம்மா பள்ளியில் ௬ட்டம் நடைப்பெறும் என்பதை தெரிவித்தார்கள் அதன் ஆடியோ முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் தொடர்பாளர் :- இல்யாஸ் ஒழி செய்தி
என்றும் அன்புடன் ..
சிராஜுதீன் - M-S-T