சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24-ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1-ம் தேதி நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.