குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் உலக கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனூப்குமார் தலைமையிலான 14பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கான சீருடையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கபில்தேவ் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கபில்தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, நிருபர் ஒருவர், உலக கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தான் அணி ஏன் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேட்டார். அதற்கு, நீங்கள் இந்தியர் என்றால் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என கபில் பதில் அளித்தார். அப்போது அந்த நிருபர், தற்போது இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று தான் என கூறினார்.
இதற்கு கபில்தேவ், காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை இழந்துள்ளோம், என்றார். அந்த நாடு பங்கேற்பது போன்ற சில விஷயங்கள் குறித்து அரசு தான் முடிவு செய்யவேண்டும். வீரர்களாகிய நாங்கள் நாட்டிற்கு கடமை செய்ய வேண்டிய நிலையில், குளத்தில் குதிக்க வேண்டும் என்றால் உடனடியாக குதிக்க தயாராக இருக்க வேண்டும். 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியாவும் ஒன்று. இதில் இந்தியா நன்கு விளையாடு என்றனர்.