27 ஜூலை 2011
சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலா, இளவரசி ஆஜர் - முதல்வர் ஜெ. ஆஜராக வில்லை!
அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு தொடர்ந்த வழக்கு 15 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் இன்று 27 ம் தேதி நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று சசிககலாவும் அவரது உறவினர் இளவரசியும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று அமைச்சரவை கூட்டம் மற்றும் அலுவல் இருப்பதால் ஆஜராக வில்லை என்று தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி