அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றைமீறி நடப்பவனுக்கும் உவமை–ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.(அதன்படி) அவர்களில் சிலருக்கு கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
பொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப்பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.ஆனால் அது மட்டும் போதாது. மக்கள் அனைவரையும் பாதிக்கும் பொதுப்பிரச்னைகள் அனைத்திற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள்,ஆபாசம்,விபச்சாரம்,வன்முறை,பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,இலங்கர்களை வழிகேடான,குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், இன்னும் இதுபோன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்றவரை களமிறங்கிப் பணியாற்றிட வேண்டும்.
இவை மட்டும் அல்ல. மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம், முதியோர் பிரச்னைகள், விவாகரத்து, குழந்தைகளைப் பாதிக்கும் மன நலப் பிரச்னைகள், குடும்ப வன்முறை, மாணவர்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் போன்ற அனைத்து விதமான பிரச்னைகள் குறித்தும் பொது அரங்குகளில் நாம் விவாதித்திட வேண்டும்.
பிரச்னைகளுக்கான சரியான தீர்வு குறித்து மற்றவர்களுடன் விவாதிக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்துக்கும் இஸ்லாம் தருகின்ற நடைமுறைத் தீர்வு குறித்து மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும். இதில் நமது சமூக அக்கரை வெளிப்பட வேண்டும். கிஞ்சிற்றும் (உள்நோக்கம்) இருந்திடக் கூடாது.இதில் நாம் சுயநலம் இன்றி நேர்மையாகவும், மனத் தூய்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் திருப்திக்காகவே நமது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும்.
மேற்கண்ட நபிமொழியின் கருத்து நமக்குச் சொல்லும் செய்தியை சற்று ஆழமாக சிந்தியுங்கள்: பொதுப் பிரச்னைக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் – அதே பிரச்னைகளில் நாமும் சிக்கிக் கொண்டு விடுவோம். மதுவும் போதைப் பொருட்களும் நம் சமூகத்தையும் பாதிக்கும். விபச்சாரம் நம்மை மட்டும் விட்டு வைக்காது. விலைவாசி நம்மையும் சேர்ந்துத் தான் வாட்டும். எல்லாப் பிரச்னைகளின் நிலையும் அப்படித் தான்.
எனவே தேவைதான் – ஒரு புதிய தலைமுறை (aamf )
*இளைய தலைமுறையே அதிரைக்கு ஒரு முன்மாதிரியான இளைஞர்களை உருவாக்க வேண்டும் .
*நடுநிலையான,மற்ற நிவாகத்தை,பிறரை தாக்காமல் நன்கு ஆராய்ந்து தெளிவாக சிந்திக்கின்ற தலைமுறையாக (aamf) இருக்கவேண்டும்.
*தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்ற ஒரு தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)
*எதிலும் உணர்ச்சி வசப்படாத ஒரு தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)
*பின்தங்காமல் தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஒரு தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)
*இஸ்லாத்தைப் புரிந்து மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)
*யாருடைய மனமும் கோணாமல் புரிந்து நடக்க ௬டிய தலைவராக இருக்க வேண்டும். (aamf)
*மக்களைப்பற்றி கவலைப் படக்கூடிய ஒரு தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையாக இருக்க வேண்டும்.(aamf)
(அதிரைமக்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு மனதுடன் இருக்க வேண்டும்)
என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)