09 ஆகஸ்ட் 2011
நோன்பு - சட்டம்! - சலுகை!!- பரிகாரம்!!!. - தொடர் - 4
முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?
சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.
மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.
எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;.
எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).
1) நோன்பு கடமையாகும்
2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்
3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)
4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.
5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.
இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.
நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 'உணவு' என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது.
எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கறி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.
இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.
நன்றி : முஜிப்.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி