
பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வட்டாரம் தோறும் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமாக குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் வரும் 12ம் தேதி பட்டுக்கோட்டை தாலுக்காவிற்கான மக்கள் குறை தீர்க்கும் முகாம் நமதூர் அருகில் உள்ள சேன்டாக்கோட்டை கிராமத்தில் இம் முகாம் நடைபெற இருக்கிறது.
இதில் நுகர் பொருள் வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் குடும்ப அட்டை தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தொடர்புடைய வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து தீர்வு காணபடும் என தஞ்சை மாவட்ட ஆட்ச்சியர் திரு பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டு கொள்கிறது .
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்
பதிப்பு :அதிரை புதியவன்