"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 ஆகஸ்ட் 2011

ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரமும் இலங்கையும்

0 comments
அமெரிக்காவில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதன் கடன் மீளளிக்கும் ஆற்றல் "AAA" என்ற அதி உயர் தரத்தில் இருந்து "AA+" என தரம் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (Standard and Poor’s) என்ற தரப்படுத்தல் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா 2007 - 2008 காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலமைகளில் இருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிப்படைந்து வேலையின்மை வீதமும் ஒன்பது புள்ளி ஒரு சதவீதம் என மிக உயர்வாக காணப்படுகின்றது. அத்துடன் வரவு செலவு திட்ட பற்றாக் குறையும் மிகவும் பாதகமான நிலையில் உள்ளதுடன், சீனா போன்ற நாடுகளில் பெருமளவு கடன்களை பெற்று பொருளாதாரத்தினை இயக்கி வருகின்றது. இதனாலேயே அமெரிக்காவின் கடன் மீளளிக்கும் ஆற்றல் குறைக்கப்படுவதாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிப்படையும் போதெல்லாம் முதலில் அடிவாங்குவது ஐ.அ.டொலரே. இந்த நிலையில், ஏனைய உலக நாடுகள் தமது ஒதுக்கம் அல்லது கையிருப்பில் பெரும் பகுதியினை ஐ.அ.டொலரில் பேணுகின்றன. இதனால் அவை விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கப் பொருளாதாரம் தாக்கப்படும் போதெல்லாம் நெருக்கடி நிலைக்கு ஆளாகின்றன.

இவ்வாறு இருக்க, இலங்கையில் தற்போது முதலீடு தொடர்பான அச்சுறுத்தல் குறைவாக காணப்படுகின்றது; பொருளாதார வளர்ச்சி வீதம், பணவீக்க வீதம், வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுப் படுகடன் தொடர்பாக திருப்தியளிக்க கூடிய நிலையினை கண்டுள்ளதால் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் (Moody’s Investors Service Singapore (Pvt) Ltd and Fitch Ratings) அண்மையில் இலங்கையின் கடன் மீளளிக்கும் ஆற்றல் 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் ஒரு பில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான கடன் பிணைப் பத்திரங்களை இலங்கை
அரசு சர்வதேச நிதிச் சந்தையில் விற்பனை செய்திருந்தது.

இதேவேளை இலங்கையும் தனது ஒதுக்கு அல்லது கையிருப்பில் பெருமளவினை ஐ.அ.டொலரிலேயே பேணி வரும் நிலையில், தற்போது அமெரிக்க பொருளாதாரம் அல்லது ஐ.அ.டொலர் மீது எழுந்துள்ள சந்தேகமானது, இலங்கை அண்மையில் பெற்ற தரச் சாண்றினை கேள்வி குறியாக்கி உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

(என்.சிவரூபன்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி