"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஆகஸ்ட் 2011

பிரமிக்க வைக்கும் அதிரை பைத்துல்மால் !

0 comments
ஒவ்வொரு வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கான ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதக்கா நிதியுதவியகளைப்பெற துபையிலுள்ள அதிரைவாசிகள் தங்குமிடங்களுக்கு துபை கிளை பைத்துல்மால் நிர்வாகிகள் செல்வது வழக்கம். கடந்த 2004 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ரமழானிலும் இவ்வாறு செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஒவ்வொரு வருடமும் நமதூர்வாசிகளைச் சந்திக்கும்போது அதிரை பைத்தில்மாலின் செயல்பாடுகளில் ஒருசில குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதும்,அதற்கான பதிலை/விளக்கத்தை அதிரை பைத்துல்மால் தலைமையகத்தில் இருந்து பெற்று தெரிவிப்பதுமாக இருந்து வருகிறோம்.

இந்தமுறை நமதூர்வாசிகளிடமிருந்து முந்தைய வருடங்களைப்போல் குறைகள் எதுவும் சொல்லப்படாதது சற்று ஆச்சரியத்தைத் தந்தது. பொதுவாகவே மனிதர்களால் நடத்தப்படும் எந்த அமைப்பின் செயல்பாடுகளிலும் ஒருசில குறை/நிறைகள் விமர்சிக்கப்படுவது இயற்கை என்றாலும், வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் அத்தகைய குறை எதுவும் சுட்டிக்காட்டப்படாதது மகிழ்ச்சியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 18 வருடங்களாக நமதூருக்கென அதிரை பைத்துல்மால் செய்துவரும் சேவைகள் அதிரையில் பொதுநல அமைப்புகளின் வரலாற்றில் இல்லாத ஒன்று என்பதை அதிரைவாசிகளும் அக்கம்பக்க ஊர்வாசிகளும் உணர்ந்து அதிரை பைத்துல்மாலை அங்கீகரித்துள்ளனர். எனக்குத் தெரிந்து அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு கூத்தநல்லூர், அய்யம்பேட்டை போன்ற ஊர்களில் அதிரை பைத்துல்மாலின் செயல்திட்டத்தை அறிந்து இதேபோன்று பைத்துல்மால்களை உருவாக்கியுள்ளனர்.

பெரும்பாலும் முஸ்லிம் அமைப்புகள் என்றாலே ஆண்டுக்கொரு மீலாது விழாவோ அல்லது கத்தூரி விழாவோ நடத்தி, தப்ரூக் வழங்கி கூடிக்கலைவதே நாம் இதுவரை கண்டுவந்துள்ளோம். ஆனால் பைத்துல்மாலோ சற்று வித்தியாசமான பிரச்சினைகளை கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது. பெயருக்கேற்ப பைத்=வீடு, மால்=நிதி. அதாவது நிதியகம் என்ற வகையில் பொதுமக்களின் பொருளியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மார்க்க ரீதியிலான தீர்வுகளை வழங்கி வருவது இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாட்டில் இல்லாத ஒன்று.

முஸ்லிம்களுக்கான பொருளாதார உதவிகளை மையமாகக் கொண்டு இயங்கினாலும், பிறமதத்தவருக்கும் நிதி சார்ந்த உதவிகளைச் செய்து வந்துள்ளது. ஜகாத் விநியோகம் குறித்த குர்ஆனிய வழிகாட்டலில் முஸ்லிமல்லாத வறியவர்களும் ஜகாத் நிதியில் பங்குபெறத் தகுதியானவர்கள் என்பதால் பைத்துல்மாலால் சமயநல்லிணக்கம் வளர்க்கும் அமைப்பாகவும் செயல்பட முடிகிறது. இது பிறமத அமைப்புகளிடம் இல்லாத மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.

கடந்த 18 வருடங்களாக பைத்துல்மாலின் சேவைகளை பின்னோக்கிப் பார்க்கும்போது வெரும் 1000 ரூபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு இந்தளவுக்கு வளர்ந்திருப்பது அதன் செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே என்றால் மிகையில்லை. முழுக்க முழுக்க பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் இதுவரை ஒரு ரூபாய்கூட பொருளாதார மோசடி குற்றச்சாட்டு எழுந்ததில்லை.பைத்துல்மாலை உருவாக்கி பல்வேறு விமர்சனங்களுக்கிடையிலும் நடத்தி செயல்பட்டு வரும் நல்லுள்ளங்களின் முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக! ஆமின்.

உங்கள் ஜகாத், ஃபித்ரா மர்றும் ஸதகா தர்மங்களை பைத்துல்மாலுக்குச் செலுத்தி இறைப்பொருத்தம்நாடிய பயணத்தில் உங்களையும் இணைத்து,பன்மடங்கு நன்மை தரும் ரமலானில் உங்கள் நன்கொடைகளைச் செலுத்தி பைத்துல்பாலின் சேவைகள் தொடர்வதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.

பதிப்பு :அதிரைக்காரன்
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி