நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பழைய கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது மனைவி மல்லிகா. திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக மாயகிருஷ்ணன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் மல்லிகாவிற்குத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். இதனையடுத்து மல்லிகாவின் அண்ணன் சுப்பையா மற்றும் மூத்த மகன் தியாகராஜன் ஆகியோர் மல்லிகாவைத் தேடி திருப்பதிக்குச் சென்று அங்கிருந்து மல்லிகாவை அழைத்து வந்தனர். இதனை அக்கம்பக்கத்தினர் தவறுதலாக பேசியதால் மனமுடைந்த மல்லிகாவின் இளைய மகன் சிவராமன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி : இந்நேரம்