குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே நடந்த கார் குண்டு தாக்குதலில் 10 பேர் பலியாயினர். பாகிஸ்தானில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்ட நகரில் நேற்று மசூதி ஒன்றில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருந்தது. ஏராளமானோர் நேற்று தொழுகையில் கலந்து கொண்டனர். அப்போது மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களிலும் திடீரென குண்டு வெடித்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முல்லாஒமரை தலைவராக கொண்டு இயங்கும் தலிபான்கள் காரணமாக இருக்கலாம் என குவெட்டா நகர போலீசார் அதிகாரி மெகபூப் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நன்றி : todaybbc