"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 செப்டம்பர் 2011

ஒருபாலர் திருமணம் இயற்கை நியதிக்கு மாறானது; போப் விளாசல்...

0 comments

ஆனும்- பெண்ணும் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டு, சந்ததிகளை பெருக்கி, அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான் இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறைக்கு மாற்றமாக நாகரீகத்தின் பெயரால், ஆனும்-ஆனும்- பெண்ணும்-பெண்ணும் திருமண பந்தத்திலும், இதற்கு வெளியிலும் இணையும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. சில நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டும் இருக்கின்றன. இந்தியாவில் கூட ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் அவ்வப்போது வலுவாக எழுகிறது. ஒரே பாலியல் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு சமீபத்தில் விஜயம் செய்த போப்பாண்டவர், 10 லட்சம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையில், ஒருபாலர் திருமண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கை. அதைத்தான் நாம் திருமணம் என்று அங்கீகரிக்கவும் முடியும். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இது இயற்கை நியதிக்கு மாறானது. திருமணம் என்பது புனிதமானது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்ற உறவின் மூலம் பிணைக்கப்படும் போது அவர்கள் தங்கள் இன்ப, துன்பங்களை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி மாண்புமிக்க ஆண்-பெண் திருமண முறை நிரந்தரமானது. விவாகரத்தை ஏற்க முடியாது என்று போப்பாண்டவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
போப்பாண்டவரின் மேற்கண்ட விளாசல் நிச்சயம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பேரிடியாகும். ஏனெனில் நாகரீகம் என்பது மனிதனின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி, மனிதனை காட்டுமிராண்டி காலத்திற்கு இழுத்து செல்லும் வகையில் அமையக் கூடாது. இதைத் தான் உலகப் பொதுமறை குர்'ஆன் அன்றே சொன்னது;
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:21 ]

ஆக்கம் : அதிரை FACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி