"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 ஆகஸ்ட் 2011

அதிரை பைத்துல்மாலின் நன்றிக் கடிதம் ...

0 comments


அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).



அதிரை பைத்துல்மாலின் சிறப்புமிகு திட்டங்களில் ஒன்றான ஃபித்ரா அரிசி விநியோகத் திட்டத்திற்கு நிதியை வசூல் செய்து அனுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தேவையும், எதிர்பார்ப்பும் கூடுகின்ற நிலையில், ஃபித்ரா நிதியை வசூலிப்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக உருவாகியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும், அதிகமான போட்டியையும் சந்திக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், திட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடாமல் முடிந்த நிதியைச் சேகரித்து அனுப்பியுள்ளீர்கள். இதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம்.



தங்கள் எல்லோரது உழைப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் பன்மடங்கு நன்மையை வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக என உளமாரத் துஆ செய்கிறோம்.

வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்.

தகவல் : துபை abm
பதிப்பு :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி