"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
03 செப்டம்பர் 2011

வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா...

0 comments

சென்னை: வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு, கடந்த 20 வருடங்களாக ஆலோசனை வழங்கிவரும், குளோபல் ரீச்(Global Reach) எனும் அமைப்பு, தற்போது, மாணவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கவுள்ளது.
சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில், வரும் செப்டம்பர் 5ம் தேதி, நியூசிலாந்து நாட்டின் 8 பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்ளும் நேர்முக நிகழ்ச்சியை குளோபல் ரீச் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது, மதியம் 1pm முதல் மாலை 7pm மணிவரை நடைபெறவுள்ளது. பொறியியல், வியாபாரம்(Business), தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோ-டெக்னாலஜி போன்ற அறிவியல் சார் படிப்புகளும், வரலாறு, இலக்கியம், வணிகம்(Commerce) மற்றும் அக்கவுண்டிங் போன்ற கலை சார் படிப்புகளும், மல்டிமீடியா, அனிமேஷன், ஸ்கிரிப்ட் எழுதுதல், திரைப்படம், தொலைக்காட்சி இயக்கம் மற்றும் நடிப்பு தொடர்பான படிப்புகளும் அந்தப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இந்த 8 பல்கலைகளும், டிப்ளமோ, இளநிலைப் பட்டங்கள், பட்ட டிப்ளமோ(Graduate Diplomas), முதுநிலைப் பட்ட டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் போன்றவைகளை வழங்குகின்றன. இந்த நேர்முக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மாணவர்கள், முன்கூட்டியே குளோபல் ரீச் அமைப்பில் பதிவுசெய்ய வேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு மின்னணு அழைப்புகள்(E-invites) வரும். இதில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள், தங்களுடைய பிளஸ்2 சான்றிதழ்களின் நகல்களை எடுத்துவர வேண்டும். தங்களது சான்றிதழ்களை ஏற்கனவே குளோபல் ரீச் அமைப்பில் சமர்ப்பித்தவர்கள், நேரடியாக நேர்முக நிகழ்வில் பங்கேற்கலாம். Chennai@globalreachonline.com என்ற மின்னஞ்சல் முகவரியில், இதற்கான முன்பதிவு செய்யலாம்., இதுகுறித்து இன்னபிற தகவல்களை அறிந்துகொள்ள 91 9841014499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி : அதிரை post

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி