"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 செப்டம்பர் 2011

மீண்டும் அமெரிக்காவில் பீதி ...

0 comments

அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று கூட உருவாக்கப்படவில்லை என, அந்நாட்டு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மீண்டும் ஒரு பொருளாதார மந்தத்தை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்ற பீதி இதனால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா கடந்த ஜூலையில் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி அதற்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து சில நாட்களில், அந்நாட்டு பங்குச் சந்தை மற்றும் உலகின் முக்கிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டன. இந்நிலையில், ஜூலையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டதாகவும், இதனால் அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம், 9.2 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொழிலாளர் துறை அறிவித்தது. இதையடுத்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. ஆனால் நேற்று முன்தினம், தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் புதிய வேலை வாய்ப்பு ஒன்று கூட உருவாக்கப்படவில்லை எனத் தெரிவித்தது. இதை யடுத்து, பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.அதேநேரம், ஜூலையில் உருவாக்கப் பட்டதாகக் கூறிய ஒரு லட்சத்து 17 ஆயிரம் வேலைவாய்ப்புகள், 85 ஆயிரமாகவும், ஜூன் மாதம் உருவாக்கப்பட்டதாகக் கூறிய 46 ஆயிரம் வேலைவாய்ப்புகள், 20 ஆயிரமாகவும் குறைந்து விட்டன என, திருத்தப்பட்ட தகவல்களையும் தொழிலாளர் துறை வெளியிட்டது. இதனால், அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 சதவீதமாகவே தொடர்கிறது. ஆகஸ்ட் மாதம் குறைந்தபட்சம் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகளாவது உருவாகும் என கணிப்புகள் கூறின. ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக வெளிப்பட்டுள்ளது.கடந்த 1945க்குப் பின், ஒரு மாதத்தில் ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாகாத நிலை இப்போது தான் முதன் முதலாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில்,"அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகளிலும், அரசியல் தலைமையிலும் அமெரிக்க நிறுவனங்கள் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் தான் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் மோசமான பாதையை நோக்கிச் செல்கிறது. இதனால் டாலரின் மதிப்பு இன்னும் குறையவே வாய்ப்பு உள்ளது' என்றனர். இந்தச் சிக்கலான நிலையால் அமெரிக்கா மீண்டும் ஒரு பொருளாதார மந்தத்தை சந்திக்க நேரிடும் என்ற சந்தேகம் வலுவாகியுள்ளது. அதேநேரம், வரும் 8ம் தேதி காங்கிரஸ் சபை யில் அதிபர் ஒபாமா வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதாரம் குறித்து பேசவுள்ள உரையை, நாடு பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.அமெரிக்க மத்திய வங்கியும் அரசும் மேலும் பல நிதியுதவிகளைச் செய்தும் புதிய வேலைவாய்ப்பு உருவாகாதது, அமெரிக்கா வில் தற்போது கிலியைக் கிளப்பியுள்ளது. இதன் அடிப்படையில் அமேரிக்காவுக்கு வேலைத் தேடிப்போகும் மக்கள் குறைந்துக் கொண்டே வருகிறார்கள். இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளாதால் இந்தியாவில் வேலைத் தேடிக் கொள்வது புத்தியாக இருக்கும் என்று கருதுகிறார்கள் அறிஞர்கள் .

ஆக்கம் : அதிரைFACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி