"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 செப்டம்பர் 2011

முத்துப்பேட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்...

0 comments

முத்துப்பேட்டையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது, முத்துப்பேட்டை ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில் 10.9.2011 சனிக்கிழமையன்;று நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்காக, 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர். இதில் பெண் காவல் துறையினரும் அடங்குவர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கும் பணியினை திருச்சி மண்டல ஐ.ஐp மஹாலி, தஞ்சை மண்டல டி.ஐ.ஐp ரவிக்குமார், திருவாரூர் மாவட்ட எஸ்.பி சேவியர் தனராஜ், அவர்கள் மேற்கொண்டனர்
>ஜாம்புவானோடை, வடகாடு, கல்லடிக்கொல்லை, தில்லைவிளாகம், ஆலங்காடு, செம்பவன்காடு மற்றும் உள்ள 16 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளானது, ஜாம்புவானோடை – வடகாடு சிவன் கோயிலிருந்து மதியம் சுமார் 3 மணிக்கு புறப்பட்ட ஊர்வலமானது முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா, ஆசாத் நகர் பாலம், பழைய பேருந்து நிலையம், பங்களாவாசல், பட்டுக்கோட்டை சாலை வழியாக சென்று செம்படவன் காட்டில் உள்ள பாமணியாற்றில் அதிர்வேட்டுகள் முழங்க கரைக்கப்பட்டது. கரைக்கப்பட்ட நிகழ்ச்சி முடிந்தவுடன் ஊர்வலத்தினர் புற வழிச்சாலை வழியாக சென்றனர்.
விநாயகர் ஊர்வலத்தின் முன்னிலையினை கர்நாடகா மாநிலத்தினை சார்ந்த ஸ்வாமி கணேஷ் கிரி மஹாராஜ் (ஆதி சங்கர மடம் – ஸ்ரீரங்கப்பட்டினம்) அவர்கள் ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் பி. தங்கராஜ் சிறப்புரையாற்றினார். ஊர்வல துவக்கத்தினை சக்தி சிதம்பரத்தேவர் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்ற முருகானந்தம், மாவட்டச் செயலாளர் பேட்டை சிவா, பா.ஜ.க ஒன்றியத்தலைவர் ராமலிங்கம், மற்றும் நகரத்தலைவர் மாரிமுத்து அவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துக்கொண்டனர். இந்தியா நாடு.. இந்து நாடு, இந்த படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா..? முத்துப்பேட்டை கருப்பு கோட்டை போன்ற வாசக கோஷங்களை எழுப்பியவாறு இவர்கள் சென்றனர். ஊர்வலத்திற்கு முன்னும் பின்னும் ரிசர்வ் போலீஸ் 200 க்கு மேற்பட்டவர்கள் சென்றார்கள். பலத்த பாதுகாப்பினை காவல் துறையினர் செய்து இருந்ததால் எந்த விதமான அசம்பாவித சம்பவம் முத்துப்பேட்டையில் நடைபெற வில்லை. இஸ்லாமிய நல் இதயங்ளும் பிரச்சனை இல்லாத அளவிற்கு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பினை நல்கினார்கள் என்றும் குறிப்பிட்டும் சொல்லலாம்.
முத்துப்பேட்டையில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக வேண்டி கண்காணிப்பு கேமராக்கள் அங்காங்கே பொறுத்தப்பட்டு இருந்தது. மற்றும் சாலைகளில் பல இடங்களில் இரும்பினால் செய்யப்பட்ட பாதுகாப்பு வேலியானது போடப்பட்டு இருந்தது. அதனால் மக்கள் போக்குவரத்து மிகவும் கஷ்டமாக இருந்தது. அத்துடன் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் போடப்பட்ட கம்பு வேலியானது ஆட்டோவினை நிறுத்துவதற்கு மிகவும் இடையூறாகவும் இருந்தது என்பதினை பற்றி காவல்துறையினர் கவலைப்படவில்லை. ஏன்.. இந்த அவமான சின்னம்.. முத்துப்பேட்டைக்கு மட்டும் என்று தெரியவில்லை. எத்தனையோ ஊர்களில் மத ஊர்வலங்கள் நடக்கும் போது, காவல் துறையினர் சிறிய அளவில் தான் பாதுகாப்பு கொடுப்பார்கள். ஆனால் முத்துப்பேட்டை மட்டும் விதி விலக்காக உள்ளது. பாதுகாப்பு என்ற போர்வையில் அதிக அளவில் காவல்துறையினர் ஊரில் இருப்பதால் ஏதோ கலவரம் நடைபெற போகிறதோ என்ற பீதியும் ஊர் மக்கள் மனதில் உள்ளது. ஆண் காவல்துறையினர் அனைவரும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும், பெண் காவல்துறையினர் கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடத்திலும் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் உள்ள செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் மக்களின் வரிப்பணத்தினை தான் வீண் விரயம் செய்து உள்ளனர்

முத்துப்பேட்டையிலிருந்து நமது சிறப்பு நிருபர்

முத்துப்பேட்டைorg

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி