உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித நிலைபாட்டை மேற்கொள்வது என்று விவாதிப்பதற்காக அதிரை மேலத்தெருவில் உள்ள தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் கூட்டம் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள், பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சங்கத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 16 மற்றும் 17 ஆகியவற்றில் வார்டு உறுப்பினர்களைப் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 16ஆவது வார்டில் அப்பியான் N.A.முகமது யூசுப் அவர்களின் மனைவி திருமதி. நிலோபர் அவர்களும் 17ஆவதுவார்டில் அ.அ. அப்துல் வகாப் அவர்களின் மகளும் LIC N.முகமது சலீம் அவர்களின் மனைவியுமான திருமதி.ரபீக்கா B.Sc.C.S அவர்களும் போட்டியின்றி (UNOPPOSED) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மேலும் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் MMS.பஷீர் அகமது அவர்களுக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்டவர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று தாஜுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
நன்றி: அதிரை.இன்