குருதிப்பார்க்க வேண்டுமென்று
குத்திப்பார்க்க ஒரு கூட்டம்;
தட்டிக்கேட்க நினைத்தாலும் எங்களை
கொட்டிவைக்கும் உலகம்!
அடிப்படைவாதி என
அடைமொழிக் கொடுக்கும் அவலம்;
காவிப்போர்வை அணிந்துக்கொண்டு
குருதிகளைத் தூவிச்செல்லும் மோசம்;
பக்கம் பக்கமாய் அலசினாலும்
பத்திரிகைத் தர்மத்தைக் காணோம்!
கூரிய வாளுக்கு குழந்தைகளும்
தொலைந்த தேசம்;
அழுது நியாயம் கேட்டாலும் உலகம்
தீவிரவாதியென்றேப் பேசும்!
பலியாய் நாங்கள் ஆனாலும்
பயங்கரவாதி என்றேக் கூறும்;
காத்திருக்கிறோம் நாங்கள்
காலம் என்றாவது மாறும்!
வித்திட்ட விடுதலைக்கு
விலை எங்கள் இன்னுயிர்;
காட்டித்தந்தக் கூட்டத்திற்கு
காவியத்தலைவன் என்றப் பெயர்!
எல்லாம் தெரிந்த உலகமோ
எதுவும் காணாமல் நிற்கும்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
எல்லாத் திசையிலும் ஒலிக்கும்
“இஸ்லாமியத் தீவிரவாதி”நன்றி : யாசர் அரபாத்