"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 செப்டம்பர் 2011

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

0 comments
ஹைதராபாத்,செப்டம்பர் 13: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் இன்று காலை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற உறவினர் மரணம் அடைந்தார்.

அயாஸுத்தீன் தனது உறவினர் ரஹ்மானுடன்(16) ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் பைக்கில் படுவேகமாக சென்றுள்ளனர்.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள புப்புலகுடாவில் அவர்கள் பைக் சறுக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அயாஸுத்தீன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அப்ஸல் சிகிச்சை பலனின்றி பிரதாபமாக உயிர் இழந்தார்.

மகன் விபத்தில் சிக்கிய செய்தி கிடைத்ததும் அசாருத்தீன் லண்டனில் இருந்து ஹைதராபாத் விரைந்துள்ளார்.

நன்றி :முத்துப்பேட்டை

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி