புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தஞ்சை தெற்கு மாவட்ட ததஜ அறிவித்துள்ளது.
30-09-2011 அன்று வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுபட்டினம் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தாக்குதலுக்குஉடந்தையாகசெயல்பட்ட சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரியும், இனிவரும் காலங்களில் பள்ளிவாசல்கள் மீது அத்துமீறல்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ததஜ கூறியுள்ளது.
30.09.2011 வெள்ளி கிழமை அன்று அதிரை தக்வா பள்ளியிலிருந்து மாலை 03 மணிக்கு வேன் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: நெய்னா முஹம்மது
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்