"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 செப்டம்பர் 2011

உள்ளாட்சித் தேர்தலில் மமக தனித்துப் போட்டி - ஜவாஹிருல்லாஹ்...

0 comments

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கையாண்டதால் தொண்டர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது :
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.

அதன்விளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க., அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப் படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.

எனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

நன்றி:மல்லிப் பட்டினம் nijam(avl)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி