அஸ்ஸலாமு அலைக்கும்,
கிறுக்கிய என் எழுத்துக்களைக்
குறுக்கெழுத்து என நீ
கொஞ்சிய நாட்கள்
உறைந்துப்போய்;
மை ஊற்றி;
பக்கங்களையும் திண்ணும்
எழுதுகோல் உறங்கிப்போனதால்
உறைந்துப்போய்;
சிந்திக்கும் திறனும்;
கணிணிக்கும் கைப்பேசிக்கும்
கடன் கொடுத்து;
மீண்டும் மீண்டும்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொள்ள;
அழகாய் நீ ஒளித்துக்கொள்ளக்
காலமானக் காலங்களில்
காலாவதியான மை;
மயக்கத்தில் பேனா!
-யாசர் அரஃபாத்