"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 செப்டம்பர் 2011

LOVERS விளையாட்டு

0 comments

விளையாட்டு காதலி




இன்றைய இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதை மறந்து பல காலங்கள் ஆகி விட்டன. அவர்கள் விளையாட்டெல்லாம் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸில் விளையாடுவதாகவே உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் காதலிகளையும் வீடியோ கேம்சிலேயே தேடுகிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதர்க்காக ஜப்பான் நிறுவனம் ஒரு வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய உடனே கேம் சூடுபிடித்தது. மிகவும் பிரபலமடைந்தது. அந்த கேமின் பெயர் கூட 'லவ் பிளஸ்' என்பது தான்.

இந்த கேம் 'திரீடி' அனிமேசனில் உருவாக்கப்பட்டது. இந்த கேமில் மூன்று பெண்கள் வருவார்கள். அந்த மூவரில் ஒருவரை விளையாடுபவர் தங்கள் காதலியாக தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அந்த விளையாட்டுப் பெண் உங்களை அவ்வளவு சுலபத்தில் காதலனாக ஏற்றுக் கொள்ளாது. தனக்கு காதலனாக வரவேண்டும் என்றால் அவனுக்கு இன்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்த பெண் பல பரீட்சைகளை வைக்கும்.

எப்போதும் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கும் உலகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து எப்போதும் (வீடியோ) விளையாட்டு விளையாட்டு என்று இருந்து காதலிக்க கூட நேரமில்லாமல் இருக்கும் இளைஞர்களையும் மனதில் கொண்டே இந்த விளையாட்டை வடிவமைத்திருக்கிறார்கள்.

காதல் துணை இல்லாமல் வாடுபவர்களுக்காக உருவான இந்த கேமில் 'சால் 9000 ' என்ற புனை பெயரில் ஊர் இளைஞன் விளையாட தொடங்கினான். நாட்கள் செல்ல செல்ல இந்த விளையாட்டுக்கு அவன் அடிமையாகி விட்டான். கடைசியில் விளையாட்டில் வரும் மூன்று பெண்களில் ஒன்றான 'நீனே அனசாகி' என்ற அனிமேசன் பெண்ணை உண்மையாகவே காதலிக்கத் தொடங்கி விட்டான். உண்மையான ஒரு பெண்ணை காதலித்தால் ஒரு இளைஞனுக்கு என்னென்ன உணர்வு தோன்றுமோ, அதே உணர்வு இந்த காதலியின் மீதும் அவனுக்கு ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் அனசாகியை பார்க்க முடியாவிட்டால் ஏக்கத்திலே மனம் நொந்து போவான். இனி அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலை வந்தது.

திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தான். பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவை அதற்காக தேர்ந்து எடுத்தான். ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. காதலியின் அனிமேசன் உருவத்தை போட்டோ எடுத்து அதை பெரிதாக பிரின்ட் அவுட் எடுத்து தேவாலயத்தில் திருமணம் முடித்தான். அந்த போட்டோவுடனேயே முதலிரவும் நடந்தது. புகழ்பெற்ற டோக்கியோ இன்ஸ்டிட்யுட் ஆப் டெக்னாலஜி அரங்கில் புரோகிதர் வந்து சடங்குகள் செய்ய இன்னிசை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது, இந்த திருமண நிகழ்ச்சி. இந்த மனிதரின் கடைசி ஆசையாக உடலில் என்ன எழுதி வைத்திருக்கிறார் தெரியுமா? 'நான் இறந்து போனால், வீடியோ கேமில் இருக்கும் என் மனைவியையும் என்னோடு சேர்த்து புதைத்து விடுங்கள்.' எப்படி இருக்கிறது? விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம். குழந்தைகளை அதிகம் வீடியோ கேமில் மூழ்கி விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கே உண்டு.



--
Mohamed musthafa...

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி