தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும்.
இந்த கல்வியாண்டில் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. www.kalvikalanjiam.com
விலக்கு அளிக்கப்பட்டவர்கள்!
இதில் தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஏழை மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
கட்டண விவரம்:
செய்முறை தேர்வு கொண்ட மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.255ம்,
செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்புக்கு ரூ.175ம் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் சேர்த்து ஒரு மாணவர் ரூ.300ஐ செலுத்த வேண்டும்.