
சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை எது சொன்னாலும் ஏன், எதற்கு என ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தால் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? எனக்கு இதுதான் பிடிக்கும், அது பிடிக்காது, பிடிக்காததை ஏன் செய்யச் சொல்கிறீர்கள்? என எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி. அவ்வாறு உள்ள குழந்தைகளை எப்படி மாற்றுவது போன்ற கவலை பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.
அந்த கவலையை விடுங்கள். அவள் சுயமாகச் சிந்திக்கிறாள் என்று அர்த்தம். இப்படிச் செய்தால் எப்படியிருக்கும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என சொந்தமாக முடிவு எடுக்கிறாள். குழந்தைகள் அப்படித்தான் இருக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் தவறானவைகளாக இருக்கலாம், குழந்தைகள் அதை உணர்ந்து தங்களை திருத்தி கொள்வார்கள். நாம் சொல்வதை காட்டிலும் அவர்கள் உணர்ந்து திருந்தும் போது அது அவர்களுக்குள் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் கருத்துகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். தானாக மாற்றங்கள் ஏற்படும்வரை நாமும் காத்திருப்போமே!