"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 அக்டோபர் 2011

குழந்தைகளின் குணாதிசியங்களும் அவர்களைக் கையாள வேண்டிய முறைகளும்

0 comments

குழந்தைகளின் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாயக் கடமை. அவ்வாறு புரிந்து கொண்டால்தான் நல்ல வாரிசுகளாக அவர்களை வளர்க்க - வார்த்தெடுக்க முடியும்.

குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது.

அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.

குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.

பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது.

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி