ஒன்றுக்கும் உதவாத நபர்களைப் பார்த்து `போடா வெங்காயம்' என்று கூறுவார்கள். ஆனால் வெங்காயம் மகத்துவங்கள் நிகழ்த்தக் கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தொடர்ந்து வெங்காயம் சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
குடல் புற்று நோய் மரபு ரீதியாக ஏற்படும் நோய் என நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் நமது உணவு முறையின் மூலம், இந்த புற்று நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆப்பிள், வெங்காயம் போன்றவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் இந்த புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை வாய்ந்தவை.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும் இந்த நோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். எனவே வெங்காயம், ஆப்பிள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.