![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfB6agkTT0fnKc5mKNweKhQntrmhFatZhBh778B9dI8pNG8FicXAYGAVeQAzspildbtw6o_9ynPztua3ei7RKceC1-GskfJmC653CMQM4HTGV_17jsNsDWefyCRx7KNVDxrsPUtmXgVqX0/s400/metro.jpg)
பெங்களூரில் மெட்ரோ ரயில் ஓட்டுநராக விவசாயி ஒருவரின் மகள் தேர்ந் தெடுக்கப்பட்டு தனது பணியைத் துவங்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வெளியே உள்ள ககலிபுராவைச் சேர்ந்தவர் பிரியங்கா (20). எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக் என்ஜினி யரிங் டிப்ளமோ முடித் துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் ஓட்டு நராக உள்ளார். மெட்ரோ ரயில் ஓட்ட வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது,
நான் டெல்லியில் முதன்முதலாக மெட்ரோ ரயில் ஓட்டியபோது மிக வும் த்ரில்லாக இருந்தது. டெல்லியில் ஐந்தரை மாதங்கள் பயிற்சி பெற்ற பிறகே பெங்களூரில் ரயில் ஓட்டத் துவங்கி னேன். ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து ரயிலை ஓட் டுவது ஒரு தனி அனுப வம்.
எனது தந்தை ஒரு விவசாயி. என் குடும்பத் தில் நான் தான் கடைக் குட்டி. ஆனால் நான் என் குடும்பத்தாரை விட அதி கமாக சம்பாதிக்கிறேன். சைக்கிளே ஓட்டத் தெரி யாதவள் நம்ம மெட்ரோ ஓட்டுகிறாள் என்று எனது தாயார் அக்கம்பக்கத்தி னரிடம் அடிக்கடி கூறு வார்.
பயணிகளின் பாது காப்பு தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். ரயிலை ஓட்டுகையில் எச்சரிக் கையாக இருக்க வேண் டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் ஓட்டுநராக தேர்வு செய் யப்பட்டவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாங்க்காவை அதிரைஃபேக்ட் இணையத்தளம் வாழ்த்துகிறது.ஆக்கம் : M.S.T.சிராஜுதீன்
பதிப்பு : அதிரை FACT