"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
22 அக்டோபர் 2011

அல் அமீன் பள்ளியும் அதிரை அரசியலும்..!

0 comments



அதிரையில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் சிலரால் முன்வைக்கப்படும் பிரச்சனையாக அல் அமீன் பள்ளி பிரச்சனை மாறிவிட்டது உண்மையிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற பொதுவான பிரச்சினைகளுடன் அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையும் முக்கியப் பிரச்சினையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது இந்தப் பிரச்சினையை முன்வைத்து அதிமுக-மமக கூட்டணியினர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்களித்து ஓரளவு வாக்குகளைக் கவர்ந்தனர்.


2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் 2008ஆம் ஆண்டு 21ஆவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் போதும் அல் அமீன் பள்ளிப் பிரச்சனை அரசியலாக்கப்பட்டது.

அல் அமீன் பள்ளி பிரச்சினை ஒன்றும் பாபர் மசூதிபோல் தேசியளவிலான பிரச்சினை அல்ல. அல் அமீன் பள்ளி எழுவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலோ அல்லது இடையூறோ ஏற்படப் போவதில்லை. பேருந்து நிலையம் அருகே கோவில், தேவாலயம் ஆகியவை ஏற்கனவே இருக்கும் நிலையில் முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஊரில் பள்ளிவாசலும் அமைவது சமயநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அல் அமீன் பள்ளியை நிர்வகித்துவரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் பெயரில், பள்ளிவாசல் பிரச்சினையை மையமாக குறிப்பிட்டு இவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று கேட்கப்பட்டு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டிய பள்ளி நிர்வாகிகள், நேரடியாக யாரையும் குறிப்பிடா விட்டாலும் குறிப்பிட்ட கட்சியினருக்கு சாதகம் / பாதகம் ஏற்படும் வகையில் இவ்விசயத்தில் மூக்கை நுழைத்திருக்க வேண்டியது அவசியமில்லை. இனியும் அல் அமீன் பள்ளி பிரச்சனையில் அரசியலை நுழைப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வின் இறையில்லம் கட்டப்படுவதில் முஸ்லிமான எவருக்கும் மாற்றுக்கருத்தோ அல்லது தடுக்க வேண்டும் என்ற எண்ணமோ கிஞ்சித்தும் இருக்க வாய்ப்பில்லை. ஐவேளை தொழாத முஸ்லிம்கூட ஒரு பள்ளிவாசலுக்கு இடையூறாக நிற்கமாட்டான். எனவே, நடந்துவிட்ட பிரச்சினையில் இருபக்கத் தவறுகளையும் ஆய்வுக்குட்படுத்தி அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் விட்டுக்கொடுத்து விரைவில் இதற்கான தீர்வு காணப்பட வேண்டும்.


உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவுக்குப் பின் அதிரை எக்ஸ்பிரசுக்கு பேட்டி அளித்த, பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோ. அஸ்லம் அவர்கள் அல் அமீன் பள்ளி பிரச்சனையைத் தீர்ப்பது தம்முடைய முதல் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, அல் அமீன் பள்ளி நிர்வாகிகள் பேரூராட்சித் தலைவர் அஸ்லம், ஆலிம்கள் மற்றும் ஊரின் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்தாலோசனை செய்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

thanks : adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி