சமீபகாலத்தில் எந்தப் பொருளின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தால், அந்தப் பட்டியலில் உள்ள முதல் பத்து பொருட்களில் ஒன்றாக நிச்சயம் தெர்மாகோல் இருக்கும். வீட்டுக்குத் தேவைப்படும் கண்ணாடிப் பொருட்களா? இல்லை,டிவி.யா? அல்லது ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் மாதிரியான எலெக்ட்ரானிக் அயிட்டமா? அத்தனை பொருட்களையும் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது தெர்மாகோல். கட்டடங்களுக்கு 'ஃபால்ஸ் சீலிங்'அமைக்கவும் இந்த தெர்மாகோலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பால் வெண்மையாய் இருக்கும் இந்த தெர்மாகோலைத் தயாரிப்பது மிகவும் சுலபம்.
முதலீடு
குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை.
ஆள்பலம்
15 பேர்.
மூலப் பொருட்கள்
பெட்ரோலியப் பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்.
இயந்திரங்கள்
பாய்லர், ப்ரீ ஃபாமர், ஸ்டீமர், கம்ப்ரசர், கட்டிங் மெஷின் போன்ற இயந்திரங்கள்தேவைப்படுகின்றன. பாய்லர் ஒன்றின் விலை சுமார் ரூ.4 லட்சம், ப்ரீ ஃபாமர் 2 லட்சம்ரூபாய், கம்ப்ரசர் 1.5 லட்சம் ரூபாய், கட்டிங் மெஷின் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய்.
இயந்திரங்கள் கிடைக்கும் இடம்
இந்தியாவில் மும்பையில் இத்தொழிலுக்கான எல்லா வகை இயந்திரங்களும் கிடைக்கின்றன.
செய்யும் முறை
மூலப்பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்கின் விலை ஒரு கிலோ 93ரூபாய் ஆகிறது. அதனைக் கொண்டு 900 கிராம் கிரான்யூல்ஸ் எனப்படும் தெர்மாகோல்உருண்டைகளைத் தயாரிக்கலாம். மூலப்பொருளை முதலில் பாய்லரில் போட்டுசூடாக்குகிறார்கள்.
அது வெந்தபிறகு சிறு உருண்டைகளாக வெளியே வருகிறது. அதனை பாலிமர், ஸ்டீமர்,கம்ப்ரஸர் என அடுத்தடுத்த மெஷின்களில் போட்டு இன்னும் பெரிதான உருண்டையாகமாற்றுகிறார்கள். இந்த தெர்மாகோல் உருண்டைகளைத்தான் கிரான்யூல்ஸ் என்றுசொல்கிறார்கள். இதனை ஷீட்டாகவோ அல்லது மோல்டிங் செய்து நமக்குத் தேவையானவடிவத்துக்கோ மாற்றிக் கொள்ளலாம்.
வாகனம்
உள்ளூரில் டெலிவரி செய்ய வாகனங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களை சுலபமாகசென்றடையலாம்.
இடம்
தெர்மாகோல் தயாரிப்பு யூனிட் ஆரம்பிக்க சுமார் 25 சென்ட் இடம் தேவை.
ரிஸ்க்
நெருப்புதான் இந்த தொழிலின் முதல் எதிரி. பஞ்சு போன்று இருப்பதால் தெர்மாகோல்எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். எனவே நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளத் தேவையானமுன்னேற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டும்.
இன்ஷூரன்ஸ்
தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான இன்ஷூரன்ஸ் அவசியம்வேண்டும்.
மார்க்கெட்
இந்த பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு. ஆனால் இதற்கான மார்க்கெட் அதிகளவில்உள்ளது.
லாபம்
சுமார் 40 சதவிகிதம் அளவுக்கு லாபம் பார்க்கலாம்.
எக்ஸ்ட்ரா வாய்ப்பு
|
ஆக்கம் : அஹ்மத்