"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 அக்டோபர் 2011

உங்களின் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக சில டிப்ஸ் ...!

0 comments

ஹோம் ஒர்க் பற்றி விபரங்களை தினமும் அறிந்து கொள்வது பெற்றோரின் கடமையாகும். நீங்களும் குழந்தைகளோடு அமர்ந்து, அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைக்கவும். அவர்கள் ஹோம் ஒர்க் செய்யும்போது அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகம் படிக்கவும். அல்லது ஹோம் ஒர்க்கில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்காக ஒரு டைம் டேபிள் போட்டு, அதில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்கவும். விளையாடும் நேரத்தில், அவர்களை விளையாட விடவும். படிக்க வேண்டிய நேரத்தில், அவர்களை படிக்கச் செய்யுங்கள். ஹோம் ஒர்க் செய்யும் நேரத்தில் டி.வி., ரேடியோ போன்றவற்றை போடாதீர்கள். குழந்தைகளின் கவனம் படிப்பின்மேல் செல்லாமல் திசை திரும்பக்கூடும்.

குழந்தைகளுக்காக ஒரு நோட்புக் தயார் செய்து அதில் அவர்கள் செய்த ஹோம் ஒர்க்கைப் பற்றி எழுதி வைக்கவும். அவர்கள் செய்யாத வேலை பற்றியும் குறித்து வைக்கவும். அடிக்கடி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அவர்களைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் படிப்பின் முன்னேற்றத்தை பற்றி தகவல் அறியுங்கள்.

உங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் வீக்காக உள்ளதோ, அதற்கு தனியே ட்யூஷன் வைக்கலாம். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் அந்தப் பாடத்தில் அக்குழந்தையால் முன்னேற்றம் அடைய முடியாது.

நாளை உங்கள் குழந்தை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், இன்றே அதற்கு அஸ்திவாரம் போடவும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி