அஸ்ஸலாமு அலைக்கும்,
உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;
அந்நியன் ஆடையை
அந்தோ! தீயிற்கு இரையாக்கி;
முத்தமிட்டு மரணத்தை
முண்டியடித்து;
மண்ணைக் காக்க;
சுதந்திரப் போரை
புனிதப் போராக்கி;
புரட்சி செய்து – ஆங்கிலேயனை
மிரட்டிவைத்த சமூகம்;
இன்று தேசத்துரோகிகளாக
சித்தரிக்கும் அவலம்!
நாடி வெடிக்க;
உதடுத் துடிக்க;
வரலாறு உரைக்கும்;
நாங்கள் துரோகிகள் அல்ல;
சரித்திரத்தை மாற்றிப் பேசும்
மாந்தரின் இதயத்தைக்
கிழிக்க வேண்டும்;
எங்காவது ஒர் மூலையில்
உண்மை ஒட்டியிருக்கா என்று!
ஆக்கம் - யாசர் அரஃபாத்