"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 அக்டோபர் 2011

எண்ணம் என்னது ..! எழுத்து வடிவம் ..! உன்னது ..! (வாழ்த்துக்கள்)

0 comments
வாழ்த்துகள் அதிரை பதிவர்களே!

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் என்கிற இணைய வலைப்பூ மூலம் முதல் முறையாக நமதூர் மக்களுக்கு (அதிலும் குறிப்பாக) வெளிநாடுவாழ் அதிரைவாசிகளுக்கு,அதிரையில் நிகழும் செய்திகளை உடனுக்கு உடன் தந்து வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரிய காரியமாகும்.

இப்பணிக்கு மெரு௬ட்டும் விதமாக அதிரை பிபிசி,அதிரை.இன்,அதிரைநிருபர், அதிரை அனைத்து முஹல்லாஹ் ௬ட்டமைப்பு போன்ற பல இணைய வலைப்பூக்கள் அதிரைவாசிகளுக்கு அவ்வப்போது ஊரில் உள்ள நிகழ்வுகளை பதிவுகளாகவும்,காணொளி நேரலையகாவும்,ஆடியோவாகவும், புகைப்படமாகவும் சிறந்த முறையில் தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, பாரட்டக்குரியது. (அல்ஹம்துலில்லாஹ்)

பாராட்ட ஒவ்வொறு மனமும் ஏங்கித்தானே இருக்கும்? பாராட்டிக் கொள்ளுங்கள்.

நமதூர் இணைய தளங்கள் செய்தவைகளை என் நினைவில் உள்ளவரை பட்டியலிடுகிறேன்.

1) ஊரில் நடக்கும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் தருகின்றன.

2) ஊரில் உள்ள அனைத்து சகோதரர்களின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றன.

3) ஊரில் உள்ள பைத்துல்மால், சங்கங்களில் உள்ள வரவு செலவுகளை துல்லியமாக தருகின்றன.

4) கடல்களைத் தாண்டி இருக்கும் நமதூரைச் சார்ந்தவர்களின் பெருநாள் சந்திப்புகளைக் காண முடிகிறது.

5) அவ்வப்போது வேலை வாய்ப்புகளையும் நினைவூட்டுகின்றன.

6) நம்மவர்களில் யாரேனும் இறந்து விட்டால், மரண அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


7) மருத்துவர்களின் ஆலோசனைகள் மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.


இதுபோன்று துபாய் வரலாற்றில் முதன் முதலில் நடைபற்ற A A M F -ன் முதல் பொதுக்குழுவை நேரலையில் ஒளிபரபியது.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் என்னும் இடத்தில் அறிவிக்கப்பட்ட தகவல்களை பதிவுகளாகவும், ஆடியோவாகவும் ஒளிப்பரப்பியது நமதூர் மக்களுக்கு மிகுந்த பயனளித்தது.
இதுவரையும் தமிழ் நாட்டில் BLOGSPOT வலைப் பூக்களில் யாரும் இது போன்று நிகழ்ச்சினை நடத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (அல் ஹம்துலில்லாஹ்)

இப்பணிகளைச் செய்து வரும் இணைய வலைப்பூ நடத்தி வருகிற சகோதரர்களுக்கு, இக்காரியங்களில் மேலும் பல முனேற்றம் காண அதிரை FACT சார்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

இச்சிறப்பான காரியங்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அனைத்து வலைப்பூ நிவாகிகளுக்கும் ஒரு சிறிய அன்பான வேண்டுகோள்.

நமதூரில் அனுபவஸ்தர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள்,கணினி வித்வான்கள்,மூத்தவர்கள் ஆலோசனைகளைப் பெற்று,எல்லா வலைப்பூகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்

ஆக்கம் : சிராஜுதீன் M.S.T

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி