பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையானது திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணியளவில் எண்ணப்பட்டது.
முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கொரடாஞ்சேரி, நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஏழு பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இங்கு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இம்மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு அனுமதிப்பெறப்பட்ட முகவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும், செல்போன்கள் உள்ளே பயன் படுத்த கூடாது என்றும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை செய்தனர்.
அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டதால் வாக்கு எண்ணிக்கையில் சிறுது தாமதம் ஏற்பட்டது.
முத்துப்பேட்டை – பேரூராட்சி தலைவருக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்..
வேட்பாளர் பெயர்கள் வாக்குகள் கட்சி
1. கோ. அருணாச்சலம் 2310 அதிமுக
2. அபுபக்கர் சித்திக் 1926 சோஷியல் டெமாராக்டிக்
3. சா. தமீம் 1491 சுயேட்சை
4. பா. சிவக்குமார் 1332 பி.ஜே.பி
5. மு. ஜெயச்சந்திரன் 493 சுயேட்சை
6. செ.முஹம்மது மாலிக் 395 மமக
7. ஷே. சகாபுதீன் 253 சுயேட்சை
8. ஹா. ஹாரூன் 230 சுயேட்சை
9. அ. அப்துல் சலீம் 218 விடுதலை சிறுத்தை
10. கி. முகைதீன் அடுமை 192 இந்திய யூ.முஸ்லிம் லீக்
11. எஸ்.எல்.எம்.லெப்பை தம்பி 185 சுயேட்சை
12. பி.சு. பத்மனாதன் 115 தேமுதிக
13. மு. ஹாஜா மைதீன் 105 சுயேட்சை
வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவரை எங்களின் இணையத்தளம் பாராட்டி மகிழ்கிறது.
திருவாரூரிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர் : அபு ஆஃப்ரின்