காபி பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் வேளையில், அவற்றில் இன்னும் ஓர்ஆராய்ச்சி தகவல்.
அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து மற்றும் நோய் இயல்துறை பேராசிரியர் எட்வர்டு ஜியோவன்னுசி தலைமையிலான குழுவினர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
தினமும் 4 கப்புக்கும் அதிகமாக காபி குடித்தவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதமும், 2 முதல் 3 கப் வரை குடித்தவர்களுக்கு 7 சதவீதமும் குறைந்திருந்தது.
புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காபி முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், காபியில் இன்சுலின் இருப்பதால் டயபடீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜியோவன்னுசி தெரிவித்துள்ளார்.