இந்தியாவைப் பொறுத்தவரை கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா என்கிறமருத்துவர் இந்த சர்க்கரை நோய் குறித்த குறிப்பை பதிவு செய்திருக்கிறார்.
இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவானது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணிஇன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.
பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் சர்க்கரை நோய் குறித்து சுமார் நான்காயிரம்ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அறியப்பட்டிருந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன.
அதுவரை, நீரிழிவு நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாதநோயாகவே மனிதர்களை அச்சுறுத்திவந்தது.
இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவை போற்றும் விதமாக அவரதுபிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம்முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வைஏற்படுத்துவதற்கான சர்வதேச பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், ஐநா மன்றம் இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்நோக்கில் தனியான அடியாள சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐநா மன்றம் இப்படி தனியானஒரு சின்னத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பதுமிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐநா மன்றம்குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மனித உடம்பின் அத்தியாவசியத்தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில்இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளூக்கோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்துமனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில்கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப்பகுதியில் இருக்கும்கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும்.
கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாகநின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படிரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான்சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது.
சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும்சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில்எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடையரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம்சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரைகாணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும்.