"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 நவம்பர் 2011

தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? வி.ஹி.பரிஷத் ஆவேசம். . .!

0 comments

"முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் நாளில் மாடு, ஒட்டகம் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் என்ன சவுதி அரேபியாவா?" என மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பியுள்ளது.

நாளை நவம்பர் 7 ஆம் தேதி முஸ்லிம்களின் பண்டிகை நாள். இந்நாளில் மிருகங்களை அறுத்து ஏழைகளுக்குத் தானம் வழங்குவது அவர்கள் வழக்கம். இந்நிலையில், மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாடு, ஒட்டகங்களைப் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட வி.ஹி.பரிஷத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"கோவில் நகர் மதுரையில் பண்டிகையின் பெயரால் ஆடுகளைக் கண்ட இடத்தில் வெட்டத் தடை உள்ளது. 16 வயதுக்குட்பட்ட மாடுகளை எங்குமே வெட்டக்கூடாது என்கிறது பிராணிவதைத் தடைச் சட்டம். ஆடுகளை வெட்டுவதற்கும் கோழிகளை அறுப்பதற்கும்கூட மாநகராட்சி அனுமதி பெற்ற ஆடுவதைக் கூடம் உள்ளது.

யானைகளையும் ஒட்டகங்களையும் வெட்டுவதற்கு மதுரையில் எங்கேயும் மிருக வதைக்கூடம் உள்ளதா? இந்து ஆலயங்களில் இறைவனின் பரிவார மிருகங்களாக பராமரிக்கப்படும் யானை, ஒட்டகம் போன்றவற்றை, நகருக்குள் வெட்டி ரத்த ஆறு ஓடவிட்டு மலைபோல் குவியும் மிருகத்தின் தேவையற்ற பாகங்களை வைகை ஆற்றில் கொட்டி வைகையை மாசுபடுத்தும் சட்ட விரோதமான செயல் மதத்தில் பெயரால் நடக்க இருக்கிறது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி