அந்தப் பேருந்தும், டிரக்கும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை என்றும், அவை யிரண்டுமே மதீனா நகரின் குடிநீர் வாரியத்துக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவை என்றும் காவல்துறை குறிப்பொன்று கூறுகிறது. விபத்தில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள், எத்தியோப்பியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களாவார்கள்.
அந்தப் பேருந்தை இயக்கிய 20 வயதுடைய சவூதி ஓட்டுநர் சற்றே கண்ணயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அந்த ஓட்டுநரும் கடுங்காயம் அடைந்துள்ளதாகவும், அவருடன் வந்த சிறுகுழந்தை காயம் ஏதுமின்றி தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பேருந்தில் இருந்த 44 பயணிகளும் பணிமுடித்து இருப்பிடம் திரும்பும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.