"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 நவம்பர் 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011

0 comments

(பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்)


அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேல்த் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளைAAMF(துபை) ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும், நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும், நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் என AAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMF முடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை – ஐக்கிய அரபு அமீரகம்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி