"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 நவம்பர் 2011

பாதுகாப்பான பஸ் பயணம் . . .!

0 comments

தமிழ்நாட்டில் பல நடவடிக்கைகளுக்கு நமது உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புகள்தான் காரணமாக இருக்கிறது. அரசுத் துறைகள் அவர்களாகவே சிந்தித்து செயல்ப்படுத்த வேண்டிய பல திட்டங்களை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தான் நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு நேரமும், ஏதாவது சம்பவங்கள் நடக்கும்போது, இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று பல செயல்களைப் பற்றி பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால் அவை அனைத்தும், அந்த சம்பவங்கள் நடந்து சில நாட்களில், காத்திலே கலந்த கீதமாக, மக்களின் மனதைவிட்டு அப்படியே மறந்து விடுகின்றன. கிராமங்களில் ஒரு கருத்தைச் சொல்வார்கள். மயானத்தில் வைத்து பேசும் விஷயங்களைஎல்லாம் மயானத்திலேயே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

அடுத்த முறை யாருடைய சாவுக்காவது மயானத்துக்கு செல்லும் போதுதான் அந்த விஷயத்துக்கு உயிர்வரும் என்பார்கள். அதுபோல ஒரு விபத்து நடக்கும்போது, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆழமாக பேசப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் செயல்வடிவத்திற்கு வருவதில்லை. அப்படியே விட்டுவிடப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 7 -ந் தேதி, சென்னை கோயம்பேட்டில் இருந்து பொள்ளாச்சி சென்ற ஆம்னி பஸ் ஒன்று, அரக்கோணம் அருகே அவலூர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவில் விபத்துக்குள்ளாகியது. அப்போது பஸ் தீப்பிடித்து, அதில் பயணம் செய்த 22 பேர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அந்த பஸ் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட பஸ். விபத்து நடந்தவுடன், இனியும் இப்படி ஒரு விபத்து ஒருபோதும் நடக்கக்கூடாது என்று எல்லோரும் போசினோம். ஆனால் தொடர் நடவடிக்கை எதையும் யாரும் எடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் காசிநாத பாரதி பொதுநலன் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அதில் ஆம்னி பஸ்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிகளை உருவாக்குதல், கட்டண நிர்ணயம், வேகக்கட்டுப்பாடு மற்றும் தேவையான ஒழுங்கு முறை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிக்களுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சமுதாயத்துக்குத் தேவையான பொதுநல வழக்கு இது. இந்த வழக்கை நீதிபதிகள் டி. முருகேசன், கே . கே. சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். இறுதி தீர்ப்புப்படி இன்னும் பிறப்பிக்காத நிலையில், இடைக்காலத் தீர்ப்பாக மிக அற்புதமான உத்தரவுகளை பஸ் பயணிகளின் அவசர அவசிய பாதுகாப்பு கருதி நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களிலும் பின்பக்கத்தில் 'எமர்ஜன்சி' வழி அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு பயணத்தின்போதும் இப்படி ஏதாவது அவசரமான சூழ்நிலை ஏற்படும்போது, எப்படி பஸ்ஸின் பின்புறம் உள்ள இந்த வழியை பயன்படுத்த வேண்டும் என்பதை பயணிகளுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த உத்தரவை அனைத்து பஸ்களிலும் 6 வார காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் மிகத் தெளிவாக கூறியுள்ளனர். இறுதி தீர்ப்பில் இன்னும் பல பாதுகாப்பு ஏபாடுகள் தொடர்பாபான நடவடிக்கைகளை நீதிபதிகள் கூறுவார்கள் என்று தமிழ்ச் சமுதாயம் எதிர்ப்பார்கிறது. இந்தத் தீர்ப்பில் பஸ் பயணிகளின் பாதுகாப்புத் தொடர்பாக தங்களின் அக்கறையை நீதிபதிகள் வெளிக்காட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைகளைஎல்லாம் ஜூன் மாதம் அந்த விபத்து நடந்தவுடனேயே அதிகாரிகள் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. பரவாயில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது.

இனி உடனே நடவடியாக்கைகளைத் தொடங்க வேண்டும். ஆம்னி பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல் நடத்த வேண்டும். இந்த பஸ்களின் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. பயணிகளும் வேகமாகச் செல்ல வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஒரே அடியாக போய்ச் சேர்வதை விட 2 மணி நேரம் கழித்துபத்திரமாக ஊரு போய்ச் சேருவதே மேல் என்ற உணர்வு வரவேண்டும். ஆம்னி பஸ்களில் 'ஸ்கேன்' மூலம் பரிசோதித்த பிறகே லக்கேஜ்களை ஏற்ற வேண்டும். நீதிபதிகள் வழங்கப்போகும் இறுதி தீர்ப்பு நிச்சயமாக பாதுகாப்பான பஸ் பயணத்தை உறுதி செய்யும் என பயணிகள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறார்கள். போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், பாதுகாப்பான பயணங்களுக்கு என்னென்ன நடவடியாக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதை ஆழமாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

--Musthafa Bin Shahul

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி