"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 நவம்பர் 2011

உறவுகளைப் புரிய வைப்போம்!

0 comments


எப்போதாவது சந்திக்கும் உறவினர்களை குழந்தைகள் மறக்காமலிருக்கவும், அவர்களை மதிக்கவும் ஒரு அழகான வழி.. இதோ... - பேட்டி நானும் என் கணவரும் சேலத்தில் இருக்கும் என் மகன் வீட்டிற்கு சென்றிருந்தோம். நாங்கள் வீட்டின் உள்ளே நுழையும் போதே எங்களது ஆறு வயதுப் பேரன், தாத்தா நீ வாங்கித் தந்த மூணு சக்கர சைக்கிள் சூப்பர் என்றபடி வந்து ஓட்டிக் கொண்டான். ஓடிப்போய் தனது மூன்று சக்கர சைக்கிளில் உட்கார்ந்தான்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை காரணம் அந்த சைக்கிளை நாங்கள் அவனுக்கு வாங்கியே தரவில்லை. நாங்கள் திகைத்து நின்று கொண்டிருக்கும்போதே அங்கே வந்த எங்கள் மகன், அம்மா, நீயும் அப்பாவும் வாங்கித் தந்ததாக இந்த சைக்கிளை நான் வாங்கித் தந்திருக்கிறேன், என்றான்.

அது மட்டுமல்ல, சித்தப்பா வாங்கித் தந்தது என்று கலர் பாக்ஸ், அத்தை வாங்கித் தந்தது என்று ஜாமெட்ரி பாக்ஸீம் சில விளையாட்டுச் சாமான்களும் தானே வாங்கி குழந்தைகளுக்குத் தந்திருக்கிறேன் என்றான்.

இப்படிச் செய்ததற்கு அவன் என்ன காரணம் சொன்னான் தெரியுமா?

நாம எல்லாருமே பிஸியா இருக்கோம். ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு முறை தான் அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக்கவே முடிகிறது. இதனால் குழந்தை உறவுகளை மறந்தே விடுவான். அதனால் தான் இது மாதிரி சின்னச் சின்ன பரிசுப்பொருட்கள் மூலம் நம் வீட்டு உறவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன், என்றான். என் இளைய மகன் வரும்போதெல்லாம் 500 ரூபாய் பணத்தைக் கொடுத்து உன் தங்கைக்கு பண்டிகைக்கு கொடு என்பான்.

பிரிந்திருக்கும் குடும்பத்தினரின் உறவுகள் வரை இது நல்ல யோசனையாகத்தான் பட்டது. அதனால் சில வருடங்கள் கழித்து சந்தித்தாலும் குழந்தைகள் நம்மை மறக்காமல் பாசமாக இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட என் பேரன் குறைப்பிரசவத்தில் ஏழாம் மாதமே பிறந்துவிட்டபடியால் அவனுக்குக் காது கேட்காது. பள்ளியில் சேர்க்கும்போது காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள்.

அவனது படிப்பை தன் பொறுப்பாக ஏற்று என் மாட்டுப்பெண் அவனை நல்ல ஸ்கூலில் சேர்த்துவிட்டாள். என்ன பாடங்கள் நடத்தப்பட்டன. ஹோம் ஒர்க் என்ன செய்யவேண்டும் என்பதை டீச்சர் ஒரு நோட்டில் குறித்து கொடுத்துவிடுவார். வங்கியில் வேலை பார்க்கும் என் மருமகள் இரவு ஒன்பது மணி ஆனாலும் அவனுக்குப் பாடங்களை சொல்லிக் கொடுத்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறாள்.

அவளுடைய திறமையால், உழைப்பால் என் பேரன் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கி பல பரிசுகள் பெற்றிருக்கிறான். ஓவியம் வரைய ஊக்கம் கொடுத்து அதிலும் நிறைய பரிசுகள் சர்டிபிகேட் வாங்கியிருக்கிறான். தற்சமயம் புதிதாக வந்திருக்கும் அபாகஸ் (மணிச் சட்டம்) என்னும் கணக்கு முறையில், அவனைச் சேர்த்து, கரெட்டாக கிளாஸீக்கு கூட்டிப் போய் வந்தாள். என் பேரனும் முதல் மாணவனாக வந்து சேலம் மேயர் கையால் கேடயம் வாங்கியிருக்கிறான்.

அவனுக்கு நன்கு டைப் அடிக்கத் தெரியும். பொது அறிவுக் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லி விடுவான். காது கேட்காவிட்டாலும் அம்மா அப்பா சம்பளம் முதல் வீட்டு விஷயங்கள் அனைத்தையும் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வான். இது அத்தனையுமே அவனுக்கு இறைவன் தந்த வரம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது...

இவை அனைத்திலும் என் மருமகளின் உழைப்பும், முயற்சியும்தான் எனக்குத் தெரிகிறது! அதனால் கண்ணதாசன் சொன்ன மாதிரி எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்... அவன் நல்லவனாவதும் கெட்டிக்காரனாவதும் உறவினர்களிடம் பாசமாக, பெரியோர்களிடம் மரியாதையாக, வல்லவனாக மாறுவதும் அவனது அன்னை வளர்ப்பினால்தான். தேவையானபோது ஊக்கம் கொடுத்து. தவறு செய்யும் போது ரொம்ப கண்டிக்காமல் விட்டுப் பிடித்து, நல்லது நடக்கும்போது தட்டிக் கொடுத்து பாராட்டினால் எந்தக் குழந்தையும் முரடாகாது! என் குழந்தைகளும் நிறைய குறும்புகள் செய்திருக்கின்றனர்.

தசாவதார பொம்மைகள் வாங்கி கொலுவில் வைத்துவிட்டு திருவானைக்காவல் அம்மனை தரிசிக்கச் சென்றேன். திரும்பி வருவதற்குள் என் குழந்தைகள் அத்தனை பொம்மைகளுக்கும் சோப்பு தேய்ச்சு குளிச்சுவிட்டதில் பொம்மைகளின் கலர் போய் வெறும் மண் பொம்மைகளாக ஆகிவிட்டிருந்தன.

குழந்தைகளை அடித்தால் பொம்மைக்கு திரும்ப கலர் வரப்போகிறதா? இனி இப்படிச் செய்யாதே என பரிவுடன் சொன்னோம். மறுபடி தவறு செய்யவில்லை. என் பையன் ஒரு முறை காபியிங் பென்சிலை நாக்கில் தொட்டுத் தொட்டு சலவையிலிருந்து வந்த வெள்ளை பேண்டில் 1 முதல் 100 வரை எழுதியிருந்தான். வெள்ளை பேண்டை வீணாக்கியதற்காக கண்டிக்கிறதா? 100 வரை தப்பில்லாமல் அவன் எழுதியதற்காக பாராட்டுவதா? - பாராட்டினோம் அந்த நாளில் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன.

வீட்டில் நிறையக் குழந்தைகள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதையும் விட்டுக் கொடுப்பதையும் பெரியோர்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொண்டன. ஆனால் இப்போது பெற்றோர் அவற்றைப் பழக்க மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி