புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!
தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!
அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!
வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!
ஆக்கம் : - யாசர் அரஃபாத்