02 டிசம்பர் 2011
அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...
* குழந்தைகளுக்குப் பிறந்த நாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல்... நேரங்களில் பரிசளியுங்கள்! அளிக்கும் பரிசு அவர்களுடைய வருங்காலத்துக்கு வழிகாட்டுவது போல இருக்கட்டும்.
மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவரின் இளமைக் காலத்தில் அவருடைய தந்தை ஓர் அழகான காமிராவைப் பரிசாக அளித்தார். அந்தப் பரிசைப் பற்றிக் கூறும்போது அவர் சொன்னார். "காமிராவின் வ்யூ ஃபைண்டரின் வழியே உலகை, அதன் அழகுகளை, கோணங்களைப் பார்க்கக் கற்றுக் கொண்டேன். பிற்காலத்தில் இது எனக்கு எழுத்துப் பணிக்குப் பெருமளவில் உதவியது" என்றார்.
நீங்கள் அளிக்கும் பரிசுகள் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்.
* தன் பெண், ட்வைன் நூலை இறுகக்கட்டி அதிலே ஒலி எழுப்ப முயற்சி செய்ததை அவளுடைய அம்மா ஒருநாள் கவனித்தாள்.
அடுத்த பிறந்த நாளன்று அந்தப் பெண், ஒரு வயலினை, பெற்றோரிடமிருந்து பரிசாகப் பெறும்போது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
* அவனோ அவளோ, தங்கள் விருப்பத்தை வாய்மொழியாகவோ, வேறு எவரிடத்தில் பேசும் பொழுதோ வெளியிடலாம். அவற்றைக் கவனித்து அந்த விருப்பத்தை ஈடு செய்யும் விதத்தில் பரிசளியுங்கள்.
* அழகான வாழ்த்து அட்டைகளை விடவும், சின்னச் சின்னப் புத்தகங்கள் மிகவும் பயனுள்ள பரிசுகளாக அமையும்.
* குழந்தைகளின் ஆளுமை என்பது பிறவியிலேயே அமைவதல்ல. பெற்றோரும் பள்ளியும் சேர்ந்து உருவாக்குவதாகும்.
* நல்ல பரிசுகளைத் தருவது என்பது நல்ல மகனையோ, மகளையோ உருவாக்குவதில் துணை புரியும்.
* சிறியதாக இருந்தாலும் பெரிய பரிசாக நினைத்துக் கொள்ள வைக்கும் அன்புக்குகந்த பரிசு முக்கியமல்ல! பரிசைத் தருபவரின் அன்பையும் நெஞ்சின் பாச உணர்வுகளையும் தாங்கி வருவதுதான் முக்கியம்.
* எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தரும் பரிசுகள் உறவுச் சங்கிலிகளை இணைப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி