"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 டிசம்பர் 2011

குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு ...

0 comments

ஐந்து வருடங்களுக்கு முன் நிறைய பெண்கள், குழந்தைகள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர். அப்போது உடம்பிற்கும் தேய்த்து குளிப்பர். அது சருமத்திற்கு வேண்டிய பளபளப்பைக் கொடுக்கும்.

கடலை மாவு ஒரு உயர்தர சுத்திகரிப்பான். மேலும், அது உடம்பிற்கு தேவையான எண்ணெய் பசையை உடம்பில் விட்டு விட்டு, வெறும் பிசு பிசுப்பை மட்டும் எடுக்கும். இது நமக்கு தெரியாமலேயே இயற்கையாகவே நமது சருமத்தை பராமரித்து வந்தோம். ஆனால், இப்போது அதற்கான லோஷன்களை போடும் போது அதில் கண்டிப்பாக "கெமிக்கல்" இருக்கும். ஒவ்வாமை வர வாய்ப்புகள் இல்லாத தயாரிப்பாக இருந்தாலும், பின் விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு முடிந்தவரை நாம் இயற்கை மூலிகைகள், வழிமுறைகளைக் கொண்டே சரி செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில் தடவலாமா? எப்படி தடவ வேண்டும்?

பிறந்த குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ ஆலிவ் ஆயில் தடவும் போது அது காலை நேரமாக இருக்க வேண்டும். காலையில் இளஞ்சூரியனில் ஒரு சில நிமிடங்கள் காட்டினால் தான் நாம் தேய்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு உடம்பில் பளபளப்பை கொடுக்கும்.

பாதாம் எண்ணெய் குழந்தைகளுக்கு தடவலாமா?

இது ரொம்ப காஸ்ட்லியான எண்ணெய். இருந்தாலும் தடவலாம். பாதாம் எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு வெஜிடபிள் ஆயில் கலந்து கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கடலை மாவு கொண்டு குளித்து விட வேண்டும்.

உடம்பில் நிறைய முடி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தையின் பருவம் ஒவ்வொரு சமயமும் மாறும். வயதிற்கு வந்த பிறகு பார்த்தால் முடி அதிகம் இருக்காது. அப்படியும் இருந்தால் முடியை நீக்க, கஸ்தூரி மஞ்சளை கல்லில் உரசிப் பூசி சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு குளிக்க வைக்க வேண்டும். மஞ்சள் தடவியவுடன், முடி சிறிது மஞ்சள் நிறமாக தெரியும். கருப்பாக தெரியாது. நாளடைவில் ஏற்படும் மாற்றங்களால் முடி கொட்டி விட வாய்ப்பு உண்டு. "வேக்சிங்" போன்றவற்றை செய்து கொள்ள, 16 வயது வரை நாம் காத்திருக்க வேண்டும்.

குழந்தையின் தோல் மிருதுவாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை குளிக்க வைக்கிற தண்ணீரில் ரோஜா இதழை போட்டு, 2 மணி நேரம் கழித்து குளிக்க வைக்கலாம். அது குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைப்பதுடன் இயற்கை மணமும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

குழந்தைகளின் சரும பராமரிப்பிற்காக பயன்படும் பொடி எப்படி தயாரிப்பது?

குழந்தைகளுக்கு என்று நீங்கள் சில பொடிகள் தயாரித்துக் கொள்ளலாம். பூலாங்கிழங்கு 100 கிராம், ரோஜா இதழ் 100 கிராம், ஆவாரம் பூ 50 கிராம், கடலை மாவு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் இவையனைத்தையும் நன்றாக வெயிலில் சுத்தம் செய்து விட்டு உலர்த்த வேண்டும். குழந்தைகள் உடம்பில் தடவும் போது கல், மண் இருக்கக் கூடாது. இந்தப் பவுடரை தேங்காய் பாலில் குழைத்து குழந்தைகள் உடம்பில் தேய்க்கலாம். நாளாக, நாளாக சருமம் பளபளப்பாக இருக்கும்.

குழந்தைகளின் தோல் மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கு என்ன உணவு கொடுப்பது?

சருமத்தைப் பராமரிக்க நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை ஒரு நாளில் மாற்றி மாற்றி ஒன்றோ அல்லது இரண்டு தடவையோ கொடுக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் சமைக்கிற சமையலில் கருவேப்பிலை சேருங்கள். கருவேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால், அதன் சத்து உடலுக்கு சேரும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி