சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:
காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,
லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.
காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்
றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தண்ணீரால் பரவும் அபாயம்
‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.