அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்கு இனிய அதிரைவாசிகளே !
அதிரையின் முதல் இணையதளமான அதிராம்பட்டினம்.காம் பல நடுநிலையான சுவாரசியமான செய்திகளை இணையத்தில் இணைந்து இருக்கும் அதிரை நெஞ்சகளுக்கு உடனுக்கு உடன் அதிரை இளைஞர்களின் முயற்சியால் வழங்கி வருகிறது.
அதிரை மக்களின் பெருத்த ஆதரவுடன் இணையத்தில் வளம் வரும் அதிரை.இன் அதிரை வணிகர்களை அரவணைக்கவும் தயாராகிவிட்டது. பெரும்பாலான அதிரை மக்களின் இதயத்தில் தனி இடத்தைப் பெற்று பயணித்து வரும் உங்கள் அதிரை.இன் இனி அதிரை வணிகர்களின் விளம்பரங்களையும் தாங்கி பயணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதுவும் முற்றிலும் இலவசமாக.
அதிரையின் ஒவ்வொரு தனிநபர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அதிரை.இன், அவர்களால் நடத்தப்படும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியையும் விரும்புவதால் இந்த இலவச முயற்சி. அதிரையில் அல்லது சென்னையில் அல்லது உலகத்தில் எந்தொரு பகுதியிலும் வியாபாரம் செய்து வருபவரா நீங்கள்? உங்களுடைய வியாபாரம் அல்லது நிறுவனத்தின் விளம்பரம் அதிரைவசிகளிடம் சென்று அடையவேண்டுமா? உங்கள் விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் நீங்கள் விரும்பும் தொகையை அதிரையில் இருக்கும்வருமானம் குறைந்த பள்ளிகள் அல்லது சமூக தெண்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி விட்டு,அவர்கள் தரும் ரசீதை இ-மெயில் ( info@adirai.in ) மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடவே உங்களின் விளம்பர டிசைனையும் எங்களுக்கு அனுப்பித் தாருங்கள். விளம்பரம் டிசைன் ஆளவு 300 Width x 220 Height அதிராம்பட்டினம்.காம் குழுவில் உள்ள தன்னார்வச் சகோதரர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் உங்கள் விளம்பரத்தை பதிவேற்றம் செய்வார்கள். இதற்கு சற்று காலதாமதம் ஆகக் கூடும். மேலும் விபரங்களுக்குinfo@adirai.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.
சகோதரர் “ ADIRAI.IN “ நிர்வாகி அவர்களுக்கு,
“ வாருங்கள் வணிகம் செய்வோம் ! “ என்ற தலைப்பில் வணிக விளம்பரங்களைக் கொண்டுவர உள்ளதாகவும் அதில் வருகிற வருமானத்தை கல்வி மற்றும் சமுக நலம் ஆகியவைகளுக்கு பயன்படுத்த உள்ளதாக குறிப்பிட்டு உள்ளிர்கள். முதலில் தங்களுக்கும் மற்றும் தங்களுடைய வலைதளத்திருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !
மேலும் இதில் வருகிற வருமானத்தை நமதூரில் உள்ள மஸ்ஜித்களில் நமது சமுதாய சிறுவர், சிறுமிகளுக்கு “ குரான் ஓதுதல் “ பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம் மற்றும் “ எத்தீம்கான இல்லங்களுக்கு “ பொருள்களாவோ ( அரிசி ) அல்லது நிதியாகவோ சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமிருந்து வரவு ரசீது பெற்றுக்கொண்டு செலுத்த ஏற்பாடு செய்தால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும் அல்லவா !
அன்புடன்,
M. நிஜாம்