"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 டிசம்பர் 2011

கலெக்டரிடம் நேரிடையாக ஆன்லைனில் புகார் செய்ய !

0 comments

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர், சாலைவசதி, மின்சாரம், சுகாதாரம், சமுக நலம், நிலம் கையகப்படுத்துதல், உணவுப்பொருள் வழங்கல், கல்வி, சான்றிதல் பெறுதல், இயற்கை சீற்றம் இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் அவர்களுடைய வரம்புக்கு உட்பட்டதை அவர்களின் கடமையிலிருந்து செய்ய தவறியதில்லை. அதேசமயத்தில் அவர்களின் வரம்புக்கு மீறியதை அவர்களைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறு அவர்களும் நம்மைப்போலவே.


ஓவ்வொரு மாவட்டத்திர்க்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் ஆவார். நாம் அவரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அவர்களுடைய அலுவலகத்தில் “ மக்கள் குறைதீர்ப்பு நாளில் “ தொடர்புகொண்டு நம்முடைய கோரிக்கையை மனுவாக கொடுக்கலாம் அவர்களும் அதைப் பெற்றுக்கொண்டு மனு ரசீது கொடுப்பார்கள். அதைப்பெற்றுக்கொண்ட நாம் சம்பந்தப்பட்டவர்கள் நம் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கண்காணிக்க இலகுவாக இருக்கும். மேலும் நமது கோரிக்கைகள் கலெக்டர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு குறைவு.


தஞ்சை மாவட்ட கலெக்டர் அவர்களின் அலுவலக முகவரி :-
கச்சேரி ரோடு, தஞ்சாவூர் – 613 001
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி : collrtnj@nic.in
பஸ் ஸ்டாப் : ஆற்றுப்பாலம் அருகில்

வேலைப்பளு காரணமாக நம்மால் அவரது அலுவலத்துக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அல்லது பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்களும் கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம். ( ONLINE PETITION FILING )


1. இதற்க்கு முதலில் http://onlinegdp.tn.nic.in/indexe.php இந்த லிங்கில் செல்லுங்கள்.
2. அதில் Tamil Version ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
4. பதிவு செய்து அனுப்பியவுடன் நம்முடைய கோரிக்கைக்காண பதிவு எண் ஓன்று கொடுப்பார்கள் அதை வைத்து நமது கோரிக்கையின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
5. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.


இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.

அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
thanks : adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி